சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அதிபர் பஷர் அல் ஆசாத் போராட்டக்காரர்களை அடக்க இரசாயனக் குண்டு வீசி அப்பாவி பொதுமக்கள் 1200 பேரைக் கொன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.மேலும் தடை செய்யப்பட்ட இரசாயனங்களைப் பயன்படுத்தியதாக அந்நாட்டின் மீதுப் போர் தொடுக்க அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஏன் அமெரிக்கா வளைகுடா நாடுகள் மீதே போர் தொடுக்க முயல்கிறது?இந்த முறை ஏன் சிரியா விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
சிரியாவும்,அமெரிக்காவும்:
ஆரம்பத்திலிருந்தே சிரியாவின் மீது சிறிய அளவிலான கண்ணோட்டத்துடன் மற்ற வளைகுடா நாடுகளில்(அரபுதேசம் தவிர்த்து) தனது ஆதிக்கத்தை ஆரம்பித்தது அமெரிக்கா.ஆப்கானிஸ்தான்,ஈராக் என்று தொடங்கிய அமெரிக்காவால் ஈரானிடம் தோல்வியைத் தழுவியது.சிரியாவும் தனது எண்ணெய் வர்த்தக பணமதிப்பை யூரோவுக்கு மாற்றியவுடன் அமெரிக்கா தனது கவனத்தை தீவிரமாக்கியது.அரபு நாடுகளில் தற்போது நடந்து வரும் சர்வதிகார ஆட்சியை நீக்கிவிட்டு,ஜனநாயக ஆட்சியை தளைக்க தானாக உருவானது தான் அரபு வசந்தம்(Arab Spring).இந்த அரபு வசந்த போராட்டம் துனீசியாவில் ஆரம்பித்து எகிப்து,லிபியா,ஏமன் என்று பரவியது.இந்த நாடுகளில் சர்வதிகாரிகளும் பதவி விலகினர்.மக்கள் போராட்டம் என்றாலும் இந்த போராட்டக்காரர்களுக்கு பண உதவி மற்றும் ஆயுத உதவிகளை செய்வது அமெரிக்க அரசு.ஏனென்றால் தனது ஆதரவு பெற்ற போராட்டக்காரர்களை வெற்றி பெற வைத்தால் ஜனநாயகம் என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டு அந்நாட்டை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கலாம் என்பது அமெரிக்காவின் கணக்கு.ஆனால் ஈரானிடம் தோல்வி அமெரிக்காவின் ஆதிக்கத்திற்க்கு சிறிது கலக்கத்தை உண்டாக்கியது.சிரியா எண்ணெய் வர்த்தக பணமதிப்பை மாற்றியதும்,ஈரானிடம் தோல்வி அமெரிக்காவை சற்றே ஆட்டியது.அதனால் வளைகுடா நாடுகளில் அமெரிக்கா தீவிரமாக கவனம் செலுத்த துவங்கியுள்ளது.இதன் தாக்கம் தான் சிரியா விவகாரம்.ஏற்கனவே போராட்டக்காரர்களிடம் 60% நாட்டை இழந்துவிட்டார் அதிபர்.தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி போராட்டக்காரர்களின் ஆக்கிரமப்பில் உள்ள பகுதி என்பதால் தாக்குதல் நடத்தியது அதிபர்தானா?என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.ஏனென்றால் அமெரிக்கா கூட போராட்டக்காரர்களின் உதவியுடன் இத்தாக்குதலை நடத்திவிட்டு இவ்விவகாரத்தை உலக அளவில் பெரிதாக்கிவிட்டால் நட்புநாடுகளின் ஆதரவை எளிதாக பெறலாம் அத்துடன் சிரியாவை தாக்கி எளிதாக கைப்பற்றிவிடலாம் என்பதுகூட அமெரிக்காவின் திட்டமாக இருக்கலாம்.
இரஷ்யா,ஈரானின் எதிர்ப்பும் சீனாவின் அமைதியும்:
ஈரானை அமெரிக்கா தாக்கினால் ஹோர்மூஸ் நீரிணை(உலகின் 20% எண்ணெய் இந்த வழியாக எடுத்து செல்லப்படுகிறது) மூடப் போவதாக ஈரான் அதிரடியாக அறிவித்தது.இதனால் அமெரிக்கா அதிரடியாக பின்வாங்கியது.இருந்தாலும் ஈரானை தந்திரமாக வீழ்த்த அதன் அண்டை நாடுகளின் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.அதன் தொடக்கமாகத்தான் சிரியாவின் மீது கவனத்தை தொடங்கியுள்ளது.இதை அறிந்த ஈரான் சிரியாவுக்கு இராணுவ உதவிகளை அளிக்க முன் வந்துள்ளது.இதே நேரத்தில் இரஷ்யாவும் சிரியாவை தாக்கினால் தக்க பதிலடி என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது.அத்துடன் தனது போர்க்கப்பல்களை சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.அத்துடன் இரஷ்யாவின் நேரடி எச்சரிக்கையால் இங்கிலாந்து இவ்விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது.அமெரிக்காவும் தனது நட்பு நாடுகளின் ஆதரவை திரட்டி கொண்டு வருகிறது.சீனாவும் தனது நிலைபாட்டை இன்னும் தெளிவாக சொல்லவில்லை கண்டிப்பாக அமெரிக்காவிற்க்கு எதிராக தான் தனது முடிவுகளை அறிவிக்கும்.அது வெறும் ஆதராவாக இருக்கும் பட்சத்தில் அமெரிகா தனது முடிவில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும்.ஒருவேளை இராணுவ உதவிகளை சீனா சிரியாவுக்கு அளிக்க முன்வந்தால் அது அமெரிக்காவிற்க்கு பெரிய அடியாக விழும்.
அமெரிக்கா மற்றும் நட்புநாடுகள் vs இரஷ்யா-ஈரான்-சிரியா:
சிரியாவிற்க்கு இரஷ்யா தூண்மாதிரி இருப்பதால் அமெரிக்கா சற்று கலக்கத்தில் உள்ளது.ஏனென்றால் இரஷ்யாவின் ஆயுத பலம் தன்னைவிட வலுவானது என்பதாலும் மேலும் அரைநூற்றாண்டாக இரஷ்யா அமெரிக்காவை தாக்குவதற்க்கு சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.ஒருவேளை சிரியா மீது தாக்குதல் நடத்தினால் இரஷ்யா முழுவீச்சில் திருப்பி தாக்கும்.அத்துடன் இருநாடுகளும் மற்ற நாடுகளின் ஆதரவை திரட்டும் இதில் கண்டிப்பாக சீனா மற்றும் வடகொரியா இரஷ்யாவுக்கே ஆதரவளிக்கும்.அது அமெரிக்காவிற்க்கு மிகப்பெரிய பேரிடியாக அமையும்.இதனால் மூன்றாவது உலகப்போர் உண்டாக வாய்ப்புண்டு.ஒருவேளை போர்மூண்டால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரிய அடியை வாங்கும்.இதனால் அமெரிக்கா சற்றே யோசித்தே அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கும்.மேலும் மக்களின் எதிர்ப்பு சிரிய அதிபருக்கு எதிராக இருப்பதால் தனது அரபு நாடுகளின் உதவியுடன்கூட தந்திரமாக சிரியாவை கைப்பற்றலாம்.சிரிய மக்களின் ஒற்றுமையின்மை அமெரிக்காவிற்க்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.இதனால் எளிதாக மக்களிடையே பிரச்சினையை உண்டாக்கிவிட்டு தனது ஆதரவுபெற்ற போராட்டக்காரர்களின் உதவியுடன் அமைதியாக சிரியாவை கைப்பற்றி தனது ஆதரவாளர்களை ஆட்சியில் அமர்த்தலாம்.அமைதியாக கைப்பற்றலாம் என்றால் ஆண்டுகள் பல ஆகுமென்பதால் கண்டிப்பாக போர் மூலமாகதான் அமெரிக்கா கைப்பற்ற முயலும் அது எத்தகைய அழிவை உண்டாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.கண்டிப்பாக ஈராக்,ஆப்கானிஸ்தானில் நடந்த சேதங்களை விட மிகப்பெரிய அளவில் இந்த போரால் சேதங்கள் உண்டாகும்



No comments:
Post a Comment