Saturday, November 8, 2014

அமெரிக்காவின் ஆயுத தளவாடங்கள் விற்பனை தந்திரம் - பாகம் 2

 

இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினை:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஜம்மு&காஷ்மீர் பிரச்சினையை இவ்வுலகமே அறிந்தது.இந்தியா பாகிஸ்தான் பிரிவினைவாதத்தின் போதே ஐ.நா சபையின் மூலம் ஜம்மு&காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்று முடிவு செய்திருந்தால் அன்றோடு இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் ஆனால் அப்போதைய நேரு அரசு தீர்ப்பு நமக்கு பாதகமாக வந்துவிட்டால் என்ற அச்சத்திலேயே அம்முடிவை கைவிட்டது.அன்றிலிருந்து ஜம்மு&காஷ்மீர் தமக்குதான் சொந்தம் என்று பாகிஸ்தான் இன்றுவரை இந்தியாவுடன் பிரச்சினை செய்து வருகிறது.இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான்,மேற்கு பாகிஸ்தான் என்று இரண்டு தனிததனி இடங்களில் இருந்தது..தற்போதைய பங்களாதேஷ் தான் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது.முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கிழக்கு பாகிஸ்தானை தனிநாடாக்க மிகப்பெரிய அளவில் உதவி செய்தார்.இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையும் உண்டாக்கியது.ஜம்மு&காஷ்மீர் விவகாரமும்,பங்களாதேஷ் உருவாக்கமும் பாகிஸ்தான் இந்தியாவுடன் நேரடியாக மோத வித்திட்டது.இருநாடுகளும் அவ்வப்போது எல்லையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சண்டைப் போட்டுக் கொண்டனர்.இருமுறை இருநாடுகளுக்கிடையில் போர் மூண்டுள்ளது.இதனால் இருநாடுகளும் தனது பாதுகாப்புத் துறையைப் பலபபடுத்த ஆயுதங்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தன.
இந்த சூழ்நிலையை  அமெரிக்க ஆயுத வியாபாரிகள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர்.தொடர்ச்சியாக இந்தியா வாங்கிக் குவிக்கும் ஆயுதங்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை கணக்கில் காட்டி பாகிஸ்தானிடம் வியாபாரம் செய்கிறது.பாகிஸ்தான் வாங்கிக் குவிக்கும் ஆயுதங்களின் தரம் மற்றும் எண்ணிக்கையைக் காட்டி இந்தியாவிடம் வியாபாரம் செய்கின்றனர்.இந்த வியாபார சூட்சமத்தை இன்றுவரை அவர்கள் கையாண்டு வருகின்றனர்.அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுக்கு மறைமுகமாக பண உதவி செய்து வருகின்றனர்.மேலும் அமெரிக்காவின் உளவு அமைப்புகள் இவர்களுக்கு இரகசியமாக பயிற்சி அளிக்கின்றனர்.இவர்களால் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின்லேடன்.இத்தீவிரவாத இயக்கங்கள் அடிக்கடி பாகிஸ்தானிலும்,இந்தியாவிலும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.ஜம்மு&காஷ்மீரில் இவர்கள் நடத்தும் தாக்குதலுக்கு அளவே இல்லை.இவ்வாறாக உள்நாட்டிலும் தாக்குதல் நடப்பதால் இரு நாடுகளும் மேலும் தமது பாதுகாப்பைப் பலப்படுத்த மேலும் ஆயுதங்களை அவர்களிடம் வாங்குகின்றனர்.

இந்தியா - சீனா பிரச்சினை:

அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவை அடுத்த தலைமுறை வல்லரசு என கூறி வருகின்றனர்.ஏற்கனவே வல்லரசு கனவில் மிதக்கும் சீனாவிற்க்கு இது மிகப்பெரிய எரிச்சலை உண்டாக்கியது.தற்போதைய தலைமுறையில் உலக வல்லரசு என்பது அந்நாட்டின் பொருளாதார பலம்,இராணுவ பலத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. எப்போது இந்தியாவும் சீனாவும் பொருளாதார வல்லரசாக உருவாக ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே சீனா இந்தியாவுடன் மோதல்போக்கை கடைபிடிக்க ஆரம்பித்தது.இந்திய எல்லைக்குள் அடிக்கடி சீன இராணுவ வீரர்கள் ஊடுருவி தொடர்ச்சியாக இந்தியாவை சீண்டி வருகின்றனர்.எங்கே இந்தியா தனக்கு போட்டியாக வந்துவிடும் என்ற அச்சத்திலேயே இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுடன் சீனா தனது நட்புறவையும் அதன் தொடர்ச்சியாக தனது இராணுவ தளங்களையும் அமைத்து வருகிறது.இதற்காக தான் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக கூறிக்கொண்டு சீனா தனது நாட்டின் நிறுவனங்களின் மூலம் அந்நாடுகளில் மூதலீடு செய்து வருகிறது.இதன் பலனாக அந்நாட்டின் இராணுவ மையங்களை சீனா தனது இராணுவ மையமாகப் பயன்படுத்தி வருகிறது.போர் மூளும் சமயத்தில் சீனா,பாகிஸ்தான்,இலங்கை என மூன்று நாடுகளிருந்து மும்முனைத் தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.இந்தியா என்னதான் சீனாவை சுற்றியுள்ள நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டாலும் போர் மூளும் காலங்களில் சீனாவை சுற்றியுள்ள தனது நட்புநாடுகளில் போர்தளங்கள் இல்லாவிடில் இந்தியா சீனாவை இந்தியாவிலிருந்தே சமாளிக்க வேண்டும்.

இத்தகைய மறைமுக போரில் இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுவதாக கூறிக்கொண்டு அமெரிக்க படைவீரர்கள் இந்திய படைவீரர்களுடன் இணைந்துக் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இந்திய ராணுவத்தை பலப்படுத்துவதாகக் கூறி மிகஅதிக அளவில் தங்கள் நாட்டு ஆயுதங்களை இந்தியாவுக்கு தொடர்ச்சியாக இறக்குமதி செய்து இலாபம் பார்த்து வருகின்றனர்.இன்றளவும் பல ஆண்டுகளாக அமெரிக்காவிடம் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது.அமெரிக்கா இந்தியாவுடன் கூட்டுபயிற்சியில் ஈடுபட ஆரம்பித்திலிருந்து சீனா தனது இராணுவத்தை மிகப்பெரிய பலப்படுத்த ஆரம்பித்தது.மேலும் சீனா அமெரிக்கா மற்றும் பிறநாடுகளிடமிருந்து கணிசமான அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது.பொருளாதாரத்தை தவிர பல விவகாரங்களில் இந்தியா உலகில் இன்று பின்தங்கியுள்ளது.இருப்பினும் இந்தியாதான் சீனாவுக்கு சரியான போட்டி என்ற கூற்றை அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.இதை அமெரிக்க முன்னனி பத்திரிக்கை நிறுவனங்கள் அடிக்கடி கருத்துக்கணிப்பு என்ற பெயரில் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றன.இதனால் இந்தியாவை தனது போட்டியாளராக கருதி ஆத்திரமடையும் சீனா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்த இலங்கையைத் தூண்டிவிட்டு தமிழக மீனவர்களை கைதுசெய்வதும்,பாகிஸ்தானை தூண்டிவிட்டு இந்திய எல்லையில் தாக்குதல் நடத்துவதும்,அதே நேரத்தில் இந்திய எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் தனது இராணுவத்தை அத்துமீற செய்வது என மறைமுகமாக தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.இதனை சமாளிக்க இந்தியா தனது இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்ததே தவிர தனது ஆயுத பலத்தை அதிகரிக்க முடியவில்லை.ஏனென்றால் இந்தியாவிடம் அத்தகைய நவீன ஆயுதங்களை தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் இல்லை.இதனால் இந்தியா ஆயுத தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் நாடுகளிடம் ஆயுதங்கள் இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.இவற்றில் அமெரிக்கா தான் இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிக்கிறது.இந்தியா எவ்வளவோ வற்புறுத்தியும் அமெரிக்கா அத்தொழில்நுட்பங்களை வழங்க மறுத்து வருகிறது.ஒருவேளை இந்தியாவிடம் கொடுத்தால் அவர்கள் தங்களிடம் இறக்குமதி செய்யும் ஆயுதங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடும் என அமெரிக்கா அஞ்சுகிறது.இவ்வாறாக சீனாவை இந்தியாவின் எதிரியாகக் காட்டியே ஆயுத வியாபாரம் செய்து வருகிறது.இந்த வியாபார சூட்சமத்தை இன்றுவரை அமெரிக்கா கையாண்டு வருகிறது.

பாகிஸ்தானைக் காட்டி இந்தியாவிடம் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா,சீனாவையும் இந்தியாவின் போட்டியாளராகவே காட்டி இந்தியாவிடம் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.இன்றுவரை உலகில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகிறது.அமெரிக்காவிடம் தொடர்ந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் பல வருடங்களாய் முதலிடம் வகித்து வருகிறது.

No comments:

Post a Comment