Wednesday, November 19, 2014

இந்திய பாதுகாப்புக்கு எச்சரிக்கையா?-பூதாகராமாக வெடிக்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்

கடந்த மாதம் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் சீனா தனது அணு ஆயுதங்களை தாங்கும் நீர்மூழ்கிக் கப்பலை இரண்டுமுறை நிலைநிறுத்தியது.இது இந்திய பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனாவால் நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இலங்கையோ இது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு ரீதியிலான பயணம் என்றே கூறி வருகிறது.மேலும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் எரிபொருள் நிரப்பவே அது கொழும்பில் முகாமிட்டது என்றும் இது இந்தியாவுக்கு விடப்பட்ட எச்சரிக்கையல்ல என்றும் மறுத்து வருகிறது.இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்யுமானால் இலங்கையின் இத்தகைய செயல்களை தடுக்க வேண்டும்.

சீனாவின் முத்துமாலைத் திட்டம்:

வட,தென் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்கா,ஆசிய-ஐரோப்பாவில் ரஷ்யா  வலிமை வாய்ந்த வல்லரசாக திகழ்வதுபோல,ஆசிய பிராந்தியத்தில் சீனா தன்னை ஒற்றை வல்லரசாக்க முயன்று வருகிறது.ஆனால் இப்பிராந்தியத்தில் இந்தியாவும் உலக வல்லரசாக வேகமாக வளர்ந்து வருகிறது.இது சீனாவிற்க்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் ஆசிய பிராந்தியத்தில் ஒற்றை வல்லரசாக இருந்தால் மட்டுமே தான் நினைத்ததை இப்பிராந்தியத்தில் நிறைவேற்ற முடியும் இதற்கு போட்டியாக இன்னொரு நாடு இருக்குமானால் அந்நாடு தனக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்குமென எண்ணுகிறது.இதனால் இந்தியாவை பொருளாதார ரீதியாகவும்,இராணுவ ரீதியாகவும் மறைமுகமாக சுற்றி வளைக்க ஆரம்பித்துள்ளது.இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்பகுதியைச் சுற்றி வளைப்பதின் மூலம் இந்தியாவின் கடல்வழி வணிகத்தையும்,கடல்சார்ந்த பாதுகாப்பையும் ஓரளவிற்கு கட்டுபடுத்தலாம் என சீனா எண்ணுகிறது.இதற்காக மிக இரகசியமாக முத்துமாலைத் திட்டம்(String of Pearls) என்ற திட்டத்தை இந்தியாவிற்க்கு எதிராக செயல்படுத்தி வருகிறது.அதாவது இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் சீனா தனது இருப்பை உறுதி செய்து கொள்வது,அதற்காக பாகிஸ்தானில் உள்ள கவ்தார்,இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா,பங்களாதேஷில் சிட்டகாங்க்,மியான்மாரில் உள்ள சித்வே மற்றும் கோகோ தீவுகள்  ஆகியவற்றில் முதலீடு செய்வதும்,அங்குள்ள துறைமுகங்களை சீரமைப்பதுடன் அவற்றை தனது இராணுவ தளங்களாகவும் உறுதி செய்து கொண்டுள்ளது.

முத்துமாலைத் திட்டத்தில் இலங்கையின் முக்கியத்துவம்:

முத்துமாலைத் திட்டத்தில் இலங்கையின் ஹம்பந்தொட்டா மிகப்பெரிய முக்கியத்துவம் பெறுகிறது.ஏனென்றால் சீனா ஹம்பந்தொட்டாவில் உள்ள தனது இராணுவ தளத்திலிருந்தே இந்திய பெருங்கடல் முழுவதையும் கண்காணிக்க முடியும்.மேலும் ஹம்பந்தொட்டாவிலிருந்து ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளை எளிதாகக் கண்காணிக்க முடியும்.இதனால் சீனா இலங்கைக்கு அதிக அளவில் கடன்களை முதலீடுகளாக வழங்கியுள்ளது.இந்தியாவுடன் சேர்ந்துவிடுவோம் என்று சொல்லியே சீனாவிடமிருந்து அதிக அளவில் நிதியை வாங்கிக் குவித்துள்ளது.சீனாவிடம் சேர்ந்துவிடுவோம் என்று சொல்லியேஇந்தியாவிடம் அதிக அளவில் நிதியை வாங்கிக் குவித்துள்ளது.இந்தியாவுக்கு இலங்கை நட்புநாடு என்ற ரீதியில் மட்டுமே நிதி அளித்து வருகிறது.வேறு எந்த தேவையும் இந்தியாவுக்கு இலங்கையில் இல்லை.ஆனால் சீனாவிற்க்கு அப்படி இல்லை ஏனென்றால் தனது தடையில்லா எண்ணெய் வணிகத்திற்க்கும்,ஆசியாவைத் தாண்டிய தனது உலகளாவிய அரசியல் பார்வைக்கும்,தனது முத்துமாலைத்திட்டத்தில் ஹம்பந்தொட்டா முக்கிய இடம்வகிப்பதால் இலங்கையின் முக்கியத்துவம் சீனாவிற்கு தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.மேலும் சீனா இலங்கையின் சாலை,இரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.இதன் ஒருபகுதியாக ஹம்பந்தொட்டா துறைமுகத்தை பராமரிக்கும் முழுபொறுப்பையும் சீனா எடுத்துள்ளது.இதுதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிச்சலைத் தந்துள்ளது ஏனென்றால் இலங்கையின் ஹம்பந்தொட்டாவில் இருந்தபடியே இந்தியாவின் கடற்படை செயல்பாடுகளை எளிதாக சீனாவால் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும் என்பதால்.

தீர்வுதான் என்ன?

இந்தியா இலங்கையை முழுவதுமாக தனது நட்புநாடாக மாற்ற வேண்டும் அல்லது சீனாவின் இத்தகைய செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.சீனாவின் முதலீடுகள் அதிக அளவில் இலங்கையில் உள்ளதால் பெயரளவில் மட்டுமே இந்தியாவின் நட்புநாடாக இருக்க இலங்கை விரும்புகிறது.ஏனென்றால் முழு நட்புநாடாக மாறினால் சீனாவின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டுமென்பதால் இலங்கை இதை விரும்பாது.இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விவகாரங்களில் இந்தியா இறங்கியுள்ளது.சீனா இலங்கையில் நீர்மூழ்கி நிறுத்திய விவகாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வியட்நாம் பிரதமருடன் இந்திய கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தியது.பேச்சுவார்த்தையின் முடிவில் வியட்நாம் கடல் எல்லைக்குள் இந்திய நீர்மூழ்கி கப்பல்கள் சுதந்திரமாக வரலாம் என்பதாகும்.அதாவது தென்சீனக் கடலில் வியட்நாமின் எல்லைக்குள் இந்திய நீர்மூழ்கி கப்பல்கள் சுதந்திரமாக திரியலாம்.சீன பிரதமர் இந்தியாவில் இருக்கும்போதே இந்தியாவின் எல்லையில் அத்துமீறி நுழைந்தவர்கள் இதை கேள்விப்பட்டு சும்மா இருப்பார்களா என்ன.இலங்கையை தூண்டிவிட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு எதிராக போலி ஆவணங்களை தயாரித்து அவர்களுக்கு தூக்குத்தண்டனையை நீதிமன்றம் மூலம் உறுதி செய்துள்ளது.இச்செயல்களுக்கு முழு பின்புலமாக இருந்து செயல்பட்டது சீனாதான்.தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மிகக்கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே பின்னாளில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கலாம்.மேலும் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன்,தனது கண்காணிப்பையும் இப்பிராந்தியத்தில் அதிகரிக்கச் செய்தால் மட்டுமே சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment