Wednesday, December 10, 2014

பெட்ரோல் விலைக் குறைப்பின் பின்னனி - ரஷ்யாவின் பதிலடி




பெட்ரோல் விலைக்குறைப்பினால் சற்றே நிலைகுழைந்த ரஷ்யாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முழுவீச்சில் களமிறங்கினார்.ரஷ்யாவின் பொருளாதாரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன்,அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தார்.

 ரஷ்யா-சீனா இயற்கை எரிவாயு ஒப்பந்தம்:

உக்ரைன் விவகாரத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயுவை வாங்குவதை வெகுவாகக் குறைத்துவிட்டன.இதன் காரணமாக ரஷ்ய பொருளாதாரத்தில் ஏற்ற,இறக்கம் இருந்ததே தவிர சரிவிற்க்கு செல்லவில்லை ஏனென்றால் அதன் அளப்பரிய இயற்கை எரிவாயுக்கள்.இதனால் அமெரிக்கா தனது அரேபிய அடிவருடிகளின் உதவியுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க செய்ததுடன்,விலைக்குறைப்பிலும் ஈடுபட்டனர்.இதன் நோக்கமே மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயு வாங்குவதை குறைப்பதாகும்.எவ்வாறெனில் உற்பத்தியை அதிகரித்து,விலையைக் குறைக்க செய்தால் மற்ற நாடுகள் அரேபிய நாடுகளின் எண்ணெயைத் தான் வாங்க விருப்பம் தெரிவிக்கும் அதுவுமில்லாமல் ரஷ்யாவில் இயற்கை எரிவாயுவை எடுக்க ஆகும் செலவு மிக அதிகம்.குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதால் மற்ற நாடுகள் ரஷ்யாவின் இயற்கை எரிவாயு வாங்குவதை வெகுவாக குறைக்க ஆரம்பித்தன.உடனே சுதாரித்துக் கொண்ட ரஷ்யா சீனாவிடம் இயற்கை எரிவாயு ஒப்பந்தம் செய்துக் கொண்டது.அதன்படி ஆண்டிற்க்கு 30 பில்லியன் க.மீ அளவிலான இயற்கை எரிவாயுவை 30 ஆண்டுகளுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான இயற்கை எரிவாயுவை சீனாவிற்கு உற்பத்தி செய்துக் கொடுப்பதாகும்.இதுதான் ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஒப்பந்தமாகும்.சீனாவுடனான ஒப்பந்தத்தின் மூலம் தனது இயற்கை எரிவாயுவின் விற்பனையை 30 ஆண்டுகளுக்கு உறுதிச் செய்துக் கொண்ட ரஷ்யா சரிந்துக் கொண்டிருந்த தனது பொருளாதாரத்தையும் நிலைநிறுத்தியது.

அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் பதிலடி:

தனது பொருளாதார பாதுகாப்பை கால் நூற்றாண்டுகளுக்கு உறுதி  செய்துக் கொண்ட ரஷ்யா அமெரிக்காவின் செயலுக்கு தக்க பதிலடி கொடுக்க முழுவீச்சில் இறங்கியது.பெட்ரோல் விலைக் குறைப்பினால் சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதை கண்டு ரஷ்ய அதிபர் புதின் கடும் எரிச்சலடைந்தார்.முதலீட்டார்கள் டாலரின் மதிப்பு குறையும்போது தங்கத்திலும்,தங்கத்தின் மதிப்பு குறையும்போது டாலரிலும் முதலீடு செய்வர்.மேலும் இவ்விரண்டில் ஏதாவது ஒன்று சர்வதேச சந்தையில் புழக்கத்தில் குறையும்போது அதன் மீது முதலீட்டாளர்கள் மிக அதிக அளவில் முதலீடு செய்வர்.தற்போது டாலரின் தேவை சந்தையில் மிக அதிக அளவில் உள்ளது ஏனென்றால் பெட்ரோல் விலைக்குறைப்பினால் அனைத்து நாடுகளும் கச்சா எண்ணெயை மிக அதிக அளவில் வாங்கி தங்கள் நாடுகளில் சேமித்து வருகின்றனர்.காரணம் பின்னாளில் எப்போது பெட்ரோல் விலை ஏறும் என்று தெரியாததால் விலை குறைவாக இருக்கும்போதே அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை டாலரில் தான் வாங்க முடியும்.தற்போதைய பெட்ரோல் விலைக்குறைப்பினால் பெட்ரோல் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதால் டாலரின் மதிப்பும்,அதன் தேவையும் சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது.டாலரின் மதிப்பை குறைத்து,முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் மீது திருப்ப புதின் மிக அதிக அளவில் சர்வதேச சந்தையிலிருந்து தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்.ஏனென்றால் தங்கத்தின் புழக்கத்தைக் சர்வதேச சந்தையில் குறைத்தால் தங்கத்தின் தேவையும்,மதிப்பும் தானாகவே அதிகரித்து விடும்.அதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பும் என்பது புதினின் கணக்காகும்.புதினின் இந்த நடவடிக்கையால் அதன் தாக்கம் முதலில் அமெரிக்கா உணராவிட்டாலும் பின்னாளில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

அதோடு மட்டுமில்லாமல் சீனாவுடன் மேற்கொண்ட  இயற்கை எரிவாயு ஒப்பந்தத்தில் டாலரில் வாங்குவதை தவிர்த்துவிட்டு சீன நாட்டு கரன்சியிலே வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.பொதுவாக உலகில் டாலர் ரிசர்வ் கரன்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.சர்வதேச சந்தையில் வாங்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு டாலரில் தான் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.இதனால்தான் பெரும்பாலான நாடுகள் மற்ற நாடுகளுடன் தாங்கள் செய்யும் ஒப்பந்தங்களின் பலனாக டாலரைப் பெற்றுக் கொள்ளும்.ஆனால் புதின் இதை தகர்த்தெறிய வேண்டுமென்பதற்காகவே சீன நாட்டு கரன்சியில் இயற்கை எரிவாயு ஒப்பந்ததை மேற்கொண்டார்.புதினின் இந்த செயலால் அமெரிக்காவிற்க்கு ஆண்டுக்கு 100 கோடி டாலர் என்று 30 ஆண்டுகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் படிபடியாகக் குறைந்துவரும் பெட்ரோல் விலைக்கும்,மெதுவாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வதற்கும் இந்த ரஷ்ய-அமெரிக்க மோதல்தான் காரணம்.

1 comment:

  1. தங்கள் உதவிக்கு மிக்க நன்றி அன்பரே :)

    ReplyDelete