Wednesday, December 17, 2014

புதினின் இந்திய வருகையும்,அமெரிக்காவின் எதிர்ப்பும்,பங்குச்சந்தையின் சரிவும்-ஓர் அலசல்

புதினின் இந்திய வருகை:

கடந்த டிசம்பர் 10-ந் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு இருநாள் பயணமாக வந்தார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் இருநாடுகளும் பாதுகாப்புத்துறை,பொருளாதாரம்,அணுசக்தி,இயற்கை எரிவாயு  ஆகியவற்றில் முக்கியமான 20 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய புதின் "வாஜ்பாய் காலத்தில் இருந்தே மோடியை எனக்கு தெரியும்.இந்தியாவுடனான உறவுகளுக்கு ரஷ்யா எப்போதும் முன்னுரிமை கொடுக்கும்.மேலும் இந்தியாவுடன் அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த ரஷ்யா விரும்புகிறது" என்று தெர்வித்தார்.மோடி பேசுகையில் "பல இக்கட்டான சூழ்நிலைகளில் ரஷ்யா இந்தியாவிற்க்கு உதவியுள்ளது.கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் சிறந்த நட்புநாடாக ரஷ்யா விளங்குகிறது.இந்தியா ரஷ்யா இடையே நட்புறவு சிறப்பாக இருக்கிறது.ரஷ்யாவுடனான வெளியுறவுக் கொள்கை எந்த சூழ்நிலையிலும் மாறாது" என்று தெரிவித்தார்.மேலும் ரஷ்யா அதிபர் புதினுடன் கிரிமீயா பிரதமர் செர்ஜி அக்ஸ்யோனோவும் இந்தியா வந்தார்.மேலும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களிலும் கிரிமீய பிரதமர் கையெழுத்திட்டார்.

 

அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகளின் மறைமுக எதிர்ப்பும்:

 கிரிமீயாவை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்ததை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மிகக் கடுமையாக எதிர்த்ததுடன் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளையும் விதித்தனர்.மேலும் கிரிமீயா மற்றும் ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டுமென அமெரிக்காவும்,ஐரோப்பிய யூனியனும் கேட்டுக் கொண்டன.இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் புதினுடன் கிரிமீய பிரதமரும் இந்தியா வந்தார்.கிரிமீயா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது.இதன் மூலம் கிரிமீயா ரஷ்யாவுடன் இணைந்ததை இந்தியா அங்கீகரிப்பதாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கருதின.கிரிமீயாவுடனான வர்த்தக உறவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மறைமுக நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆரம்பித்தன.மேலும் ரஷ்யாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவிற்க்கு பெரிய கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.அதாவது இந்தியாவின் அனைத்து அணுசக்தி நடவடிக்கைகளும் அமெரிக்காவின் கண்காணிப்பில் தான் நடக்கும் என்பதாகும்.இதன்மூலம் இந்தியாவின் அணுஆயுத நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பது அமெரிக்காவின் எண்ண்ம்.ஆனால் தற்போது ரஷ்யாவுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் கண்காணிப்பிற்க்கு கருப்பு புள்ளி வைத்துள்ளது.இதனால் அமெரிக்கா மிகக் கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறது.இருப்பினும் சீனாவை எதிர்க்க ஆசியாவில் இந்தியா தேவை என்பதால் வெளிக்காட்டி கொள்ளாமல் பொருமிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

பங்குச்சந்தையின் சரிவு:

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக உள்ளது என்றும்,இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி தெரிவித்தன.இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் மிக அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்தனர்.அதன் விளைவாக இந்தியப் பங்குச்சந்தை தன்னுடைய வரலாற்றில் மிக அதிகமாக 28,00 புள்ளிக்கும் அதிகமாகப் பெற்று உலகின் முதல் பத்து பெரிய பங்குச்சந்தை என்ற அந்தஸ்தைப் பெற்றது.ஆனால் புதினின் வருகைக்குப் பின்னர் நிலைமை தலைகீழானது.நாளுக்குநாள் இந்திய பங்குசந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.இதற்கு காரணம்,கிரிமீயாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தமது முதலீட்டாளர்களை இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மறைமுகமாக எச்சரிக்கப்பட்டனர்.அதனால் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளைத் திரும்ப பெற்றுக் கொண்டு வருகின்றனர்.ஆனால் இதற்கு முதலீட்டாளர்கள் தரப்பில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் டாலர் முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்வதற்காக இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.ஆனால் அவர்கள் முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்புநாடுகளால் நிர்பந்தபடுத்தபட்டுள்ளனர்.இதிலிருந்து இந்தியா சர்வதேச விவகாரங்கலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் அல்லது தமக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென அமெரிக்கா எண்ணுகிறது.இதிலிருந்து விலகும்பட்சத்தில் இந்தியா அரசியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

இந்திய இதிலிருந்து விடுபட எவ்வகையான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment